--- --:--:-- --

சொத்துக்காக ஆசைப்பட்ட பேரன்.. நடந்த கொடூரம்..!

5

விழுப்புரம் அருகே தாத்தா பாட்டியை கழுத்து நெரித்து கொலை செய்ததாக அவர்களின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். கலுவு – மணி தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சந்தேக வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

 

இருவரும் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்ததையடுத்து தலை மறைவாக இருந்த அவர்களது பேரன் அருள் சக்தியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

 

இதில் தாத்தா பாட்டிக்கு சொந்தமான வீடு இடத்தை தனது பெயரில் எழுதி தர மறுத்ததால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon