--- --:--:-- --

தவறாக நடக்க முயன்ற உறவுக்கார இளைஞரை கத்தியால் குத்திய இளம்பெண்..!

18

திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே தன்னிடம் தவறாக நடக்க முயன்ற உறவுக்கார இளைஞரை கத்தியால் வெட்டி படுகொலை செய்ததாக இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ரத்த கறையுடன் சரணடைந்துள்ளார்.

 

சோழவரம் அருகே அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த அந்த பெண் தனது தாய், தந்தையை பிரிந்து உறவினர்கள் இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு ரத்தக்கரை படிந்த கத்தியுடன் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 

போலீசாரிடம் தன் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் அருகே ஒதுக்குப்புறமாக சென்றதாகவும் அப்போது தனது உறவுக்கார இளைஞர் அஜித்குமார் கத்தியை காட்டி மிரட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தாகவும் தான் சுதாரித்துக் கொண்டு கத்தியை பிடுங்கி அவரை வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon