தமிழகம். புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்திலும், தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






