--- --:--:-- --

குழந்தையை கொஞ்சுவது போல தங்க செயினை பறித்த பெண் களவாணி.. !

11

சேலத்தில் 2 வயது குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மேனகா தனது 2 வயது குழந்தையுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது குழந்தை அணிந்திருந்த சங்கிலி காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

 

அதில் கோயிலில் குழந்தையை கொஞ்சுவது போல தூக்கி ஒரு பெண் தங்க சங்கிலியை திருடிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து அந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon