--- --:--:-- --

யுனிவர்சல் சாதனைப் புத்தகத்தில் சென்னை ஏர்போர்ட் சுற்றுச்சுவரில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள்!

12

சென்னை திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை விமான நிலைய சுற்றுச் சுவர்களில் ஒரே நேரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த முயற்சியை யுனிவர்சல் அற்சிவெஸ் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்துள்ளது.

 

தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை விமான நிலையத்தில் சுற்று சுவரின் ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

சுற்றுச்சுவரை பொதுமக்கள் அசுத்தப்படுத்துவது தடுப்பதற்காகவும். சென்னைக்கு வரும் வெளிநாட்டவர்கள் தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விமான நிலைய சுற்றுசுவர் 400 பாகங்களாக பிரிக்கப்பட்டு அதில் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவற்றை வலியுறுத்தும் ஓவியங்களும் வரையப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஓவியர்கள், தன்னார்வ அமைப்பினர் என ஆயிரத்து 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழில்மிகு வண்ண ஓவியங்களை தீட்டினார். பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள இது போன்ற ஓவியங்கள் வரையும் முயற்சி அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon