--- --:--:-- --

சீரியல் நடிகைகளை காண வந்த சிறுமி..! நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற நண்பர்கள்..!

6

மிழ் சீரியல் நடிகைகளை காண்பதற்காக பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்து தவித்த சிறுமியை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

பெங்களூரு ஜேபி நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சீரியல் நடிகைகளை நேரில் காண்பதற்காக தன் நண்பர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். செங்கல்பட்டு டோல்கேட் அருகே வாகன தணிக்கை நடைபெறுவதால் அவரது நண்பர்கள் சிறுமியை இறக்கி விட்டு திரும்பி சென்றனர்.

 

திம்மவரத்தில் அழுது கொண்டிருந்த சிறுமியை அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் மகளிர் காவல் நிலையத்தில் விட்டுள்ளார். சிறுமியின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து செயல்பட்டு வந்த சிறுமியின் பெற்றோர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon