--- --:--:-- --

பட்டறை உரிமையாளரை குத்தி குடலை கிழித்த கும்பல்..!

9

லாரி பட்டறை உரிமையாளரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. எடப்பாடி வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சங்ககிரியில் சொந்தமாக லாரி பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

 

வண்டலூர் அரசு மதுபான கடையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு திரும்பிய ரமேஷை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடம் இருந்து ரமேஷ் தப்பிக்க முயன்ற பொழுது அவரை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மருமகளை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon