படுத்து கிடந்தவரை பரலோகம் அனுப்பிய கும்பல்..!
அரியலூரில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமத்தை சேர்ந்த மணிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
விளையாட்டு பிள்ளையார் பட்டி அருகே மனைவிக்கு சொந்தமான இடத்தில் கடல் நீர் சாகுபடி செய்து அங்கு பத்துக்கு மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு சென்ற மணி வயலில் உள்ள தோட்டத்தில் உறங்கியுள்ளார்.
காலையில் வெட்டுக்காயத்துடன் சடலமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் ஒன்றில் மர்ம நபர்கள் நேற்று இரவு திருடிவிட்ட தப்பி சென்ற பொழுது அவர்களை ஆடு திருட வந்தவர்கள் என நினைத்து மணி தடுத்திருக்கலாம் என்றும் இதன் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.





