பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய கும்பல்..!
ஹரியானாவில் பள்ளி பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக மோதி உள்ளது.
கற்களை வீசி பேருந்து கண்ணாடிகளை உடைத்து மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் ஈடுபட்டவர்களையும் பேருந்து ஓட்டுநரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.





