--- --:--:-- --

தனியார் உணவகத்தில் வாங்கிய இட்லிக்குள் கிடந்த தவளை..!

1

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் பிரிக்கப்பட்ட இட்லிக்குள் தவளை இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

 

மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் முருகேசன் என்பவருக்கு அவரது உறவினர் அங்குள்ள தனியார் உணவகத்தில் நேற்று காலை 4 இட்லி வாங்கியுள்ளார். இதனை முருகேசனிடம் கொடுத்தபோது அவர் இட்லி பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார்.

 

அப்பொழுது இட்லி ஒன்று இறந்த நிலையில் தவளை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உணவக உரிமையாளரிடம் புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து இட்லிக்கு உரிய பணம் திரும்பப் பெறப்பட்டது. தன் இட்லி மாவையும் கீழே போட்டுவிட்டு கடையை மூடிவிட்டு உரிமையாளர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Right Menu Icon