--- --:--:-- --

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் ,கவர்னர் சேலம் வருகை

11

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகிய இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வருகின்றனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் விமானத்தில் புறப்பட்டு கோவை வருகிறார். பின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையம் சென்று அங்கு உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் பங்கேற்கிறார்.

 

கால்நடை பூங்கா ,கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய இரண்டாவது கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை திறந்து வைக்கிறார்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை விமானம் மூலம் சேலம் வருகிறார். அவரும் நாளை நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் .

Leave a Reply

Right Menu Icon