--- --:--:-- --

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்..!

7

மிழகத்தில் நாளை முதல் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடைய அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்படும் என 16 கோடி இலவச பாடப்புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டன என்றும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon