--- --:--:-- --

தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..!

1

மிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது.

 

இந்த நிலையில் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்குகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏக்கள் பதவி ஏற்பதை தொடர்ந்து திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவுவும் துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon