பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்ருக்கு கொரொனா..!
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்ருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். கவலை வேண்டாம் நான் நலமுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
ஜூனியர் என்டிஆர் தன் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.






