மாநிலத்தில் முதன்முதலாக 5.2 எடையுடன் பிறந்த குழந்தை..!
அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 5.2 கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைதான் அந்த மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பொதுவாக அங்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் இரண்டரை கிலோ எடை உடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பெண் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் கொரொனா பயம் காரணமாக அவர்கள் தற்போதுதான் வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.







