கிணற்றில் விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி இருந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு துறை..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி இருந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மோகன்ராஜ் என்பவரது கிணறு நீண்ட நாட்களாக உள்ள நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக 10 அடிக்கு மேல் நீர் நிரம்பி உள்ளது .
இதனை கண்ட மோகன்ராஜின் 15 வயது மகள் மோட்டார் போடுவதற்காக கிணற்றின் அருகே சென்றபோது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார் . நீண்ட நேரமாகியும் காணாததால் கிணற்றின் அருகில் தேடிய பொழுது உயிருக்கு போராடியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.





