--- --:--:-- --

சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..!

10

திருச்சி துறையூர் அருகே மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

அம்மா பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகள் கடந்த 2020 ஆம் ஆண்டு கர்ப்பமடைந்தார். விசாரித்த பொழுது கர்ப்பத்திற்கு தந்தை ராஜுதான் காரணம் என தெரிய வந்தது.

 

இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டார். விசாரணை முடிந்து தந்தை ராஜுவிற்கு வாழ்நாள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon