தாயை பார்க்கச் சென்ற மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தந்தை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தாயை பார்க்க சென்ற மகளை தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமர தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான அப்துல் சமது என்பவருக்கும், அவருடைய மனைவி மும்தாஜ்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இதேபோல கடந்த மாதமும் அப்துல் அடித்து துன்புறுத்தியதால் மும்தாஜ் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தாயுடன் குழந்தைகளை அனுப்ப அப்துல் மறுப்பு தெரிவித்து தன்னுடனே வைத்துள்ளார். இந்நிலையில் மகள் பள்ளி முடிந்து தனது தாயை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த அப்துல் தாயை பார்ப்பதற்காக சென்றுவந்த மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மேலும் தாய் இருக்கும் இடத்தை கேட்டு மகளை கடுமையாக தாக்கிய நிலையில் வலி தாங்காமல் சிறுமி வெளியே ஓடிவந்தார். சிறுமியை துரத்தி வந்த தந்தை அடித்து கீழே தள்ளி, கழுத்தில் மிதித்தும் டியூப்லைட்டாலும் தாக்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இதனை தட்டிக்கேட்டவர்களையும் அப்துல் தாக்க முயன்றார். ஆனால் சிறுமி வலியில் துடித்து அழுததை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்துல்லை தாக்கியதை அடுத்து அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




