பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் செய்த பிரபல சீரியல் நடிகை !
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார், அதன்படி தனுஷுடன் அவர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா திடீரென அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகியிருக்கிறார். தென்னிந்திய நடிகை என அழைக்க கூடாது என்று தெரிவித்ததாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலரும் கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்லன். பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கோலகலமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் என இருவருமே கலந்து கொண்டனர்.இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அவர் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தை திரை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மேலும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பது சீரியல் நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.





