ஆளுநர் விவகாரத்தில் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம்
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9% என மத்திய அரசே அங்கீகரித்துள்ளது. ஆனால், தொழில் வளர்ச்சி இல்லை என ஆளுநர் கூறுவது எந்தக் கணக்கின் அடிப்படையில் என்று தெரியவில்லை. தமிழகம் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
குற்றச்சாட்டுகளுக்குப் பதில்: போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் கூறுவது தவறு. தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தியே கிடையாது; வெளி மாநிலங்களிலிருந்து வருவதைத் தடுக்க எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதல்வர் இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடரைத் தொடங்கும் முறையை மாற்றுவதற்கு, ஒத்த கருத்துடைய மாநிலங்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்






