நெகிழி பையுடன் அரிசியை சாப்பிட்ட யானை..தடுக்க முயன்ற நபர்..!
கோவை மாவட்டம் செமேடு கிராமத்துகள் புகுந்த காட்டு யானை நெகிழி பையுடன் சேர்த்து அரிசி உண்ணுவதை பார்த்து அருகிருந்தவர்கள் பாசத்துடன் கூச்சலிட்ட காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.
உணவு தேடி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு ஒரு கடைக்குள் வைக்கப்பட்டிருந்த அரிசியை நெகிழிப்பையுடன் சேர்த்து யானை சாப்பிட்டதால் அந்த காட்சியை மொபைலில் படம் பிடித்த நபர் நெகிழியை சாப்பிட வேண்டாம் என பாசத்துடன் கூறினார். அதற்குள் அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிகள் அனுப்பி வைத்தனர்.





