இரட்டை ரோஜா சின்னம் விரைவில்.. ஜெயலலிதா மகள் என கூறிக் கொள்ளும் பெண்..!
ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொள்ளும் ஜெயலட்சுமி என்ற பெண் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். இரட்டை இலையுடன் கூடிய இரட்டை ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்டிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். நான் தேனியில் போட்டியிடுகிறேன். அதிமுகவை நான்காக பிரித்து இரட்டை இலை சின்னத்துக்கு அடித்துக் கொள்கின்றனர்.
ஜெயலலிதாவின் மகள் என்கிற முறையில் அவர் சொத்துக்களை உரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இரட்டை இலையுடன் கூடிய இரட்டை ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்டு இருக்கிறேன்.






