வீட்டுக்குள் வந்த பாம்பை எஜமானியிடம் சொன்ன நாய்..!
கடலூரைச் சேர்ந்த ரவி என்பவர் தனது வீட்டில் டாபர்மேன் வகையான செல்ல பிராணி வளர்த்து வருகிறார். இதில் வீட்டில் நுழைந்த பாம்பை கண்டு நாய் குரைத்து எச்சரிக்கை செய்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி பாம்பை செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் வரும் வரை 20 நிமிடங்களாக பாம்பினை ஒரு அடி கூட நகர விடாமல் நாய் குரைத்துக் கொண்டு வந்துள்ளது.
பின்பு வீட்டிற்கு வெளியே சென்று பாம்பு ஆர்வலர் பாம்பை லாவகமாக பிடித்தார். இதுவரை 10 முறை பாம்பை கண்டு நாய் குரைத்துக் காப்பாற்றி உள்ளதாக ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.






