மழை வெயிலில் 15 நாட்களாக கணவர் வீட்டு முன் கர்ப்பிணி பெண் போராட்டம்..!
சேலம் ஓமலூரில் மறைத்து வைத்துள்ள காதல் கணவரை சேர்த்து வைக்கக் கோரி, அவருடைய வீட்டின் முன் 15 நாட்களாக கர்ப்பிணிப் பெண் போராட்டம் நடத்தி வருகிறார்.
மோகன்ராஜ், பவித்ராவும் காதலிக்கு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்த நிலையில் அண்மையில் சொந்த ஊருக்கு வந்த மோகன் ராஜ் மனைவியை தொடர்பு கொள்ளவில்லை. பவித்ரா ஊருக்கு வந்து பார்த்த பொழுது மோகன்ராஜ் பெற்றோர் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி 15 நாட்களாக பவித்ரா போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .






