--- --:--:-- --

சொத்துக்காக பெற்ற தாயையே கார் ஏற்றி கொன்ற கொடூர மகன்..!

6

தென்காசியில் சொத்துக்காக பெற்ற தாயை கார் ஏற்றி மகனே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் தலைமறைவான நபரை போலீசார் தேர்வு தேடி வருகின்றனர். சங்கரநாராயணன் – முருகம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் மோகனுடன் சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது.

 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விபத்தில் சங்கரநாராயணன் உயிரிழந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் ஆஜராக தென்காசி நீதிமன்றத்திற்கு முருகம்மாளும் அவரது இளைய மகனும் பைக்கில் சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் பின்னால் வந்த கார் பைக்கின் மீது வேகமாக மோதியது.

 

இருவரும் தூக்கி வீசப்பட்டு முருகம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் நடந்தது விபத்து இல்லை. திட்டமிட்ட கொலை என தெரிய வந்தது.

 

முருகம்மாளுக்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும் மூத்த மகனுக்கு சொத்தையும் இழப்பீட்டு தொகையையும் தர முருகம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காரை வைத்து மோதி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மோகன் மற்றும் அவருக்கு உதவியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon