--- --:--:-- --

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!

IMG-20200504-WA0344

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் “குடிமகன்கள்” போதைக்காக மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டனர்.

 

இதனால் கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம்,காரமடை,சிறுமுகை,அன்னூர்,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனை களைகட்ட துவங்கியது.இதுகுறித்து இன்று நமது “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

அதன் எதிரொலியாக கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து இன்று அறிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

 

இந்த நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி.கார்த்திகேயன், ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும்,இந்த நெருக்கடியான காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து கள்,சாராயம் தயாரிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த மே மாதம் 3 ஆம் தேதியன்று கோவை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் “திடீர்”ரெய்டு நடத்தியதாகவும், இதன் விளைவாக 45 பேர் கைது செய்யப்பட்டு, 22.400 லிட்டர் சாராயம் மற்றும் 35 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு, 8 வழக்குகள் பதிவு செய்து 198.5 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டு, 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதேபோன்று மாவட்ட அளவில் தொடர்ந்து ரெய்டு நடத்தி மதுவிலக்கு தொடர்பான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon