புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும்!
ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தேவையான ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சிகள் ஏற்கும் என அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் சென்ற தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் வருமானம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
ஆனால் அவர்களை இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்காமல் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
ஏழைத் தொழிலாளர்களின் தோளோடு தோள் நிற்க காங்கிரஸ் கட்சி அளிக்கும் தாழ்மையான பங்களிப்பு இது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.







