--- --:--:-- --

எடப்பாடி நோக்கி சென்ற பேருந்து.. அப்படியே கழன்று விழுந்த பின் டயர்கள்..!

8

சேலம் அருகே பேருந்து பின் சக்கரம் தனியாக கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் எடப்பாடி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

அரியலூர் அருகே சென்ற பொழுது பேருந்தின் முன் பக்க டயர் திடீர் என வெடித்து தாறுமாறாக ஓடியது. பேருந்தின் பின்பக்க சக்கரங்களும் தனியாக கழன்று ஓடியதால் பயணிகள் கூச்சலிட்டனர்.

 

ஓட்டுனர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயணிகளை வேறு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon