தாயுடன் தகாத உறவு வைத்திருந்த கட்டிடத் தொழிலாளி கொடூரக் கொலை
தாயுடன் தகாத உறவு வைத்திருந்த கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிட தொழிலாளியான அலெக்சாண்டர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊரான கருங்கல்லுக்கு திரும்பி அங்கேயே வசித்து வந்துள்ளார்.
45 வயதாகியும் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைக்காக அவர் வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் அலெக்சாண்டருக்கும் கருங்கல் பகுதியை சேர்ந்த சகாயமேரி என்ற பெண்ணுக்கும் இடையே தவறான நட்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சகாயமேரியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சகாயம் மேரியின் தகாத உறவு விவகாரம் 22 வயதான அவரது மகன் ஜவகருக்கு தெரிய வந்துள்ளது. இந்த உறவை கைவிட்டு வருமாறு தாயிடம் கூறிய அவர், அலெக்சாண்டரையும் கண்டித்துள்ளார்.
ஆனால் அந்த உறவை கைவிட மறுத்ததுடன் வெளிநாடு சென்று வரும்போதெல்லாம் பரிசு பொருட்களை வாங்கி வந்து சகாயமேரி கொடுத்து வந்த அலெக்சாண்டர். அவ்வப்போது வெளியூர்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இது ஜவகருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அலெக்சாண்டரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய ஜவகர் திட்டமிட்டுள்ளார்.

அலெக்சாண்டரின் நடமாட்டத்தை கண்காணிக்க ஜவஹர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். சகாய நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அலெக்சாண்டரை அவரும் அவரது கூட்டாளிகள் சுனில், ஜீனோ, கிளீட்டஸ் ஆகியோருடன் சேர்ந்து வழிமறித்துள்ளனர். திடீரென அலெக்சாண்டர் மீதுமிளகாய் பொடியை தூவி உள்ளனர் .
இதனால் நிலைதடுமாறிய அலெக்ஸாண்டரை சுனில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் இதனை அடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர்தான் சாலையோரம் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் அலெக்சாண்டரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அலெக்சாண்டரை அவரும் அவரது கூட்டாளிகளும் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் சுனிலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜவகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






