சிறுவனை குடிபோதையில் அடித்துக் கொன்ற கொடூரன்.. திடீரென உயிரிழப்பு..!
வீட்டின் அருகே வசிக்கும் சிறுவனை குடிபோதையில் அடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கமலேஷ் என்ற பெயிண்டர் புழல் மத்திய சிறையில் உயிரிழந்தார்.
திடீர் என உடல் நலக்குறைவால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் போலீஸ் தாக்கியதால் தான் இறந்ததாகவும் இன்று பிறந்தநாள் கொண்டாட வேண்டிய தனது மகன் இறந்துவிட்டதாகவும் கமலேஷின் தாய் கண்ணீருடன் முறையிட்டார்.






