காதலிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த மந்திரவாதியை கொலை செய்த காதலன்..!
தர்மபுரியில் வசியம் செய்வதற்காக அழைத்துச் சென்று காதலியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கூறி மந்திரவாதியை கொடூரமாக கொலை செய்த காதலன் நீதிமன்றத்தில் சரணடைந்தான். தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் முகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இது தொடர்பாக இரண்டு இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாரணஹள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தந்தையின் நண்பரான சசிகுமார் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
சசிகுமார் தான் ஒரு மந்திரவாதி என்றும் தனக்கு மாந்திரீகம் தெரியும் என்றும் பிடித்த பெண்ணை வசியம் செய்ய முடியும் எனவும் தெரிந்ததாக கூறப்படுகிறது. அதனை நம்பினார் தினேஷ். இந்நிலையில் தோழியை வசியம் செய்வதற்காக சசிகுமார் தனியே அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அழுதபடியே வந்த தோழி தன்னை சசிகுமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சசிகுமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். தனது நண்பருக்கும், காதலியை வசியம் செய்ய வேண்டும் எனக்கூறி சசிகுமாரை ஆளில்லா பகுதிக்கு தினேஷ் அழைத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர். உடல் உறுப்புகள் சிதைந்து கொடூரமான முறையில் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.





