--- --:--:-- --

அம்மா சாப்பாடு போடவில்லை எனக்கூறி காவல்நிலையம் சென்ற சிறுவன் .!

6

பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் சந்திரிகா மார்க்கெட் அருகில் வசிக்கும் 4 வகுப்பு படிக்கும் சிறுவன் காலையில் அல்லது காவல்நிலையத்திற்கு அழுதபடி வந்துள்ளார். சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அந்த சிறுவன் என் அம்மா சாப்பாடு கேட்டா அடிக்கிறாங்க சாப்பாடு கூட சரியா போட மாட்டாங்க அவங்க சமையலறையில் சமைக்கவும் விட மாட்டேங்கிறாங்க என கதறி அழுதபடி கூறினார்.

 

சிறுவனுக்கு சாப்பாடு கொடுத்து போலீசார் சமாதானம் செய்தனர். பின் சிறுவனின் தாயை அழைத்து வரச்சொல்லி கண்டித்து சிறுவனையும் அவருடன் அனுப்பியுள்ளனர். பீகார் காவல்துறையினர் இந்த சம்பவத்தை பார்த்த இணையவாசிகளின் இப்படியும் ஒரு தாய் இருக்கிறாரா என வேதனை தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon