ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி பைக்கை திருடிய வாலிபர்..!
கோவை மாவட்டம் சூலூரில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி பயமுறுத்தி விடப்பட்டதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். நேரு நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை பார்த்த நபர் ஒருவர் சூலூர் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வரும் படியும் அங்கு வந்து பைக்கை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி அவர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து அந்த நபர் வண்டியின் சாவியை பெற்றுகொண்டு வண்டியை ஓட்டி பார்ப்பதாக கூறி வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். நெடுநேரமாக வராத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.






