பென்சிலை திருடியதால் சக மாணவன் மீது கேஸ் போடக்கூறிய சிறுவன்..!
ஆந்திர மாநிலத்தில் தன்னுடைய பென்சிலை திருடிய சக மாணவன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சிறுவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆஞ்சநேயா என்று சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சக மாணவர் ஒருவர் இவரின் பென்சில் திருடியதாக தெரிகிறது.
காவல் நிலையத்திற்கு சென்று பென்சில் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். அதிலும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சிறுவன் புகார் அளித்துள்ளார். சிறுவனை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இந்த காட்சி இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.







