திருவாடானை அருகே ஐந்திணை மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி உடல் அரசு மருத்துவமனையில் ஒப்படைப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அறிவித்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இறந்து போனார்.
நேற்று இவரதுஉடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் முடிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடல் அமரர் ஊர்தி மூலம் திருவாடானை மார்க்கமாக ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டது.





