--- --:--:-- --

அழகு நிலையத்தில் வேலைக்கு சென்ற பெண் உடல் கருகி சடலமாக மீட்பு..!

6

டெல்லியில் அழகு நிலையத்தில் வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரிடம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

டெல்லி ராஜ்பாத்தில் நகரில் உள்ள அழகு நிலையத்தில் துணை பணியாளராக வேலை பார்த்துவந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் லட்சுமி வழக்கம் போல இன்றும் வேலைக்கு சென்று வந்தார்.

 

தங்கம்மாள் மகளைக் காண அழகு நிலையத்திற்கு சென்ற பொழுது அங்கு பாதி எரிந்த நிலையில் இருந்த லட்சுமியை கண்டு அதிர்ந்தார். மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டதாக உரிமையாளர் கூறிய நிலையில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி அருகில் இருந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.

 

தை மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் லட்சுமியின் இந்த இழப்பு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி பெண்ணின் உறவினர்கள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் அழகு நிலையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Right Menu Icon