வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா வரும் 29-ஆம் தேதி தாக்கல்..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் 29-ஆம் தேதி வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா தாக்கல் ஆகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல் நாளிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







