திடீரென குறுக்கே வந்த பைக்.. அசுர வேகத்தில் மோதிய பஸ்..!
திருச்சி துறையூர் அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. அதன் உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுநரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற அந்த பேருந்து விபத்தில் சிக்கியதால் 20 பயணிகள் காயமடைந்தனர்.





