பள்ளி மாணவியை சரமாரியாக அடித்த ஆட்டோ டிரைவர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பலர் முன்னிலையில் அடித்து தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூச்சிமேடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை அதே கிராமத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் தங்கவேல் என்பவர் காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தனியார் பேருந்தில் வந்த மாணவி பேருந்து ஓட்டுனரிடம் பேசியதை கண்ட தங்கதுரை பலர் முன்னிலையில் மாணவியை தாக்கியதால் மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கும் முயன்று சிகிச்சையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





