--- --:--:-- --

தனது மகனை Pilot ஆக்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

12

ணாதிக்க எண்ணம் கொண்டவரிடம் எதிர்நீச்சல் போட்டு சாதனை செய்து காட்டும் பெண்களின் கதையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். எந்த கருவை மையமாக கொண்டு சீரியலை உருவாக்கினார்களோ அது இன்னமும் நடக்கவில்லை, அதான் பெண்கள் சாதனை செய்வது தான்.

 

2 சீசன்கள் வந்துவிட்டது, இன்னமும் குணசேகரன் என்ற பெண் அடிமை எண்ணம் கொண்டவரின் கை ஓங்கியே இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்று அவரது வீட்டுப் பெண்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் ஜெயிப்பது போல் கதை இன்னும் அமையவில்லை.எதிர்நீச்சல் சீரியல் இன்னும் பெண்களுக்கு நியாயம் இல்லாத கதையாகவே உள்ளது.

 

எப்போது இயக்குனர் குணசேகரனை வீழ்ச்சி புகழின் உச்சிக்கு பெண்கள் செல்வது போல் காட்டுவார் என தெரியவில்லை. இந்த நிலையில் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்ஷினி தனது மகன் குறித்து பெருமையாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

அதாவது தனது மகன் கிரிஷ் Pilot ஆகியுள்ளார் என வீடியோவுடன் சந்தோஷ செய்தி பகிர்ந்துள்ளார். தனி ஹெலிகாப்டரில் தனது மகன் ஓட்ட கணவருடன் பயணித்துள்ளார். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் மகனே, உன்னோடு தனியாக பறக்குறேன், இந்த தருணத்தை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன் என பதிவிட்டுள்ளார். பிரியதர்ஷினியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Right Menu Icon