--- --:--:-- --

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை மியா ஜார்ஜ..!

12

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மியா ஜார்ஜ். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி அதன்பின் தமிழில் அமர காவியம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதன்பின் இன்று நேற்று நாளை படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து வெற்றிவேல், ரம், எமன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 2020ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் மலையாளத்தில் மட்டும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

 

 

இந்த நிலையில், சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து மியா ஜார்ஜ் கொண்டாடியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon