பட விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த நடிகர்..!
அஜீத் நடித்த வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தன் அடுத்த படத்தின் விழாவில் தனது காதலிக்கு பிரபோஸ் செய்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்த பொழுது தனது காதலிக்கு முழங்காலிட்டு மலர் கொடுத்து செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் நடிகர் கார்த்திகேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. கார்த்திகேயா தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தங்களது திருமணம் வரும் 21ஆம் நாள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






