ஆண் நண்பரை நம்பி வீடியோ காலில் பெண் செய்த செயல்..!
சமூக வலைதளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் வேலூரைச் சேர்ந்த இளைஞரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ்குமார் என்ற அந்த இளைஞர் தனக்கு அறிமுகமான திருமணமான பெண் ஒருவரை ஆடை இன்றி வீடியோ காலில் பேச வைத்து அதனை பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தாம் கேட்கும்போது எல்லாம் பணம் தராவிட்டால் அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியதால் அந்த பெண் போலீசாரிடம் புகாரளித்தார்.






