--- --:--:-- --

தொழிற்சங்கம் samsung நிறுவனம் இடையேயான பேச்சுவார்த்தை 5வது முறையாக தோல்வி..!

5

samsung தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் ஐந்தாவது முறையாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையின் ஊழியர்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்தவாரம் தொடர்பாக சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் சாம்சங் நிறுவனம் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஐந்தாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தை வரும் ஏழாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தொழிலாளர்களுக்கான சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள எந்த சங்கத்தையும் ஏற்றுக் கொள்ள samsung நிறுவனம் தயாராக இல்லை எனக் கூறினார். தொழிற்சங்கத்தை அங்கீகரித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன் வந்தால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும் என்றார்.

 

Right Menu Icon