ஜீவ சமாதி அடைய உள்ள 71 வயதான சாமியாரை காண குவிந்த ஏராளமான பக்தர்கள்
சிவகங்கை அருகே 77 வயதான சாமியார் ஒருவர் ஜீவசமாதி அடைய உள்ளதாக அறிவித்துள்ளதால் இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த இருளப்ப சுவாமி என்ற எழுபத்தி ஒரு வயதான சித்தர் ஒருவர் ஆன்மீகத்தில் நாட்டம் காரணமாக பல்வேறு திருத்தலங்களுக்கு சென்றுள்ளார்.
அங்கு பல்வேறு இடங்களில் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் ஏற்கனவே ஜீவசமாதி அடைய இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிக்குள் தான் முக்தி அடைவதாகவும் அதன்பின் ஜீவசமாதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில் இங்கு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர் அறிவித்ததை அடுத்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் அவரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு உள்ளனர். ஜீவசமாதி அடைவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு கிணறு வடிவில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு இருக்கின்றன.

சித்தர் நாற்காலியில் உட்கார்ந்த கோலத்தில் அவர் உள்ளே ஜீவசமாதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று மாலை முதலே அவருக்கு சொந்தமான 57 சென்ற இடத்தில் அவர் உட்கார்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .மிக முக்கியமாக இந்த ஜீவசமாதி ஏற்பாடுகளை பொறுத்தவரையில் அவர்கள் தெளிவான பதிலை தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடைந்த பின்னர் அதன்பின் அரசு மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த அங்கு அவர் இறந்ததற்கான சான்றிதழ் வழங்கிய பின்பு தான் ஜீவசமாதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறைக்கும்,மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .



