--- --:--:-- --

ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து விட்ட பத்தாம் வகுப்பு மாணவி..!

20

துரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முரட்டு காளையை அவிழ்த்து விட்ட பத்தாம் வகுப்பு மாணவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மதுரையை சேர்ந்த யோகதர்ஷினி என்ற அந்த மாணவி 8 வயதிலிருந்து காளையே வளர்த்து வருகிறார்.

 

அந்த காளையை ஆண்களுக்கு மத்தியில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்ட அந்த சிறுமியின் தைரியத்தை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் சிலிர்த்து போகிறார்கள் சிறுமியின் காளை போட்டியில் தோல்வியை தழுவினாலும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஆறுதல் பரிசு அறிவித்தனர்.

 

ஆனால் வெற்றி பெறாததற்கு எந்த பரிசும் வேண்டாம் என்று கூறி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டு பரிசை வாங்கி செல்கிறேன் என்று யோகதர்ஷினி கூறி சென்றார்.

Leave a Reply

Right Menu Icon