வகுப்பறை மேற்கூரை இடிந்ததால் பதற்றம்.. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, கல்வித்துறை அதிகாரிகளுடன் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.






