திருடனுக்கு கடிதம் எழுதிய கேரள பள்ளி ஆசிரியர்கள்
கேரள மாநிலத்தில் திருடி செல்லப்பட்ட பென்டிரைவை கேட்டு திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் கடிதம் எழுதி இருக்கும் வினோதம் நடைபெற்றுள்ளது. கலச்சேரியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 7 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் அறையில் இருந்த நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கேமரா திருட்டு போனது.
இதேபோல் அண்மையில் மூன்று மடிக்கணினிகள், ஒரு பெண் டிரைவ், சிசிடிவி, ஹார்டிஸ்க் ஆகியவை திருடு போனது. பென்டிரைவின் தான் வருகை பதிவேடு உள்ளதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திருடனுக்கு கடிதம் எழுதிசமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அன்புள்ள திருடனுக்கு என்று ஆரம்பிக்கும் அந்த கடிதத்தில் தங்களுக்கான ஊதியத்தை தீர்மானிக்கும் பென் டிரவை மட்டும் தந்து விடும்படி திருடர்களிடம் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






