--- --:--:-- --

12-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது

1

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டி அருகே ஏழுமலை சன்னாசி கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான செல்வம் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். பின்னர் பலமுறை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் செல்வத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது மாணவி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் ஆசிரியை செல்வம் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon