தமிழகத்தில் கொரோனா குறைந்தபாடில்லை: இன்றைய தொற்று பாதிப்பு 5883 …! உயிரிழந்தோர் 118 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்திற்கு கீழாக 986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 118 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கெரோனா பாதிப்பு நிலவரம் 5 ஆயிரத்தை கடந்தே பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,043 ஆகும். இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,32,618ஆக உயர்ந்துள்ளது.
இன்றும் உயிரிழப்பு சதத்தை கடந்த 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,808ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்றும் 2-வது நாளாக தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து 986 ஆக பதிவாகியுள்ளது.
இதன் மூலம் சென்னையில் மட்டும் 1,08,124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்- இது வரை, தமிழகம் முழுவதும் 30,41,529 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 65,872 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்பு…
சென்னைக்கு அடுத்தபடியாக தேனி 452, செங்கல்பட்டு 425, திருவள்ளூர் 391, காஞ்சி 284, தூத்துக்குடி 245, தஞ்சை 227 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.







